பிரபல தமிழ் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடிப்பதற்கு சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சமீபகாலமாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் இயக்குனர்களுக்கு பிரம்மாண்ட படங்கள் எடுப்பது கடினமான வேலை என்பதால் இரண்டு ஹீரோக்களை நடிக்க வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
மேலும் மாதவனுடன் விக்ரம் வேதா படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனும் மற்ற கதாநாயகர்களுடன் சேர்ந்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடிப்பதற்கு சம்மதம் தான், ஆனால் திரையில் கதாநாயகர்கள் இவருக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளார்.