Categories
மாநில செய்திகள்

சிவகார்த்திகேயன் தந்தை மரணம்… ஹெச்.ராஜா மீது புகார்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா தான் என ஹெச் ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரான ஹெச் ராஜா சமீபத்தில் சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவஹிருல்லா தான் என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது: “நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதுமட்டுமில்லாமல் அவர் உயிரிழந்து பல வருடங்கள் ஆன நிலையில் ஹெச் ராஜா, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பெயரைக் கெடுப்பதற்காக இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இல்லாமலிருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்று அவர் கூறியிருந்தார். அவர் அவதூறான கருத்துக்களை பரப்பி விட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார். இந்த முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித நேய கட்சி சார்பாக வழக்கறிஞர் அப்ரார் கூறியுள்ளார்.

Categories

Tech |