Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இதே கூட்டணியா….? பிரபல இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்…. வெளியான புதிய தகவல்….!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயனை ரொம்ப பிடிக்கும்: நெல்சன் - I like sivakarthikeyan says Nelson

இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் நிறைந்து காணப்பட்டனர். மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனருடன் இணைந்து புதிதாக அடுத்த படத்தை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |