முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் யு சான்றிதழை தவறிவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’.நெல்சன் திலீப் குமார் இயக்கிய இப்படத்தை கேகேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்கே புரெடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டாக்டர் திரைப்படத்தை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் டாக்டர் திரைப்படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யவில்லை. இதை தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டாக்டர் திரைப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்கும் இதுவரை யு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் இந்த முறை யு சான்றிதழை தவற விட்டார் என்று தெரியவந்துள்ளது.