Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்… ‘டான்’ படக்குழுவினருடன் கொண்டாட்டம்..‌. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ‌ .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் . இவருக்கு பிரபலங்களும் ,ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள டாக்டர் ,அயலான் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது . இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் படத்தில் நடித்து வருகிறார் . சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷனுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது ‌. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருக்கிறார் ‌‌.

Categories

Tech |