ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் பட நடிகை நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை பால்கி இயக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இது மட்டுமின்றி பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமாரும் ரஜினிக்கு ஒரு கதை கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் அமையும் இப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. நடிகை பிரியங்கா மோகன்-டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.