Categories
சினிமா தமிழ் சினிமா

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்…. விஜய் டிவியில் இருந்தபோதே இவ்வளவுதான் வாங்கினாரா..?

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்தபோது எவ்வளவு வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இதை தவிர அவர் தற்போது டான், அயலான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டிவியிலிருந்து போது 2000 ரூபாய் தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தற்போது பல கோடிகளை சம்பளமாக வாங்கும் அவர் ஆரம்ப கட்டத்தில் 2000ரூபாய் தான் வாங்கியிருக்கிறார் என்ற தகவலை அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |