சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழுவினர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, ஆர்.ஜே.விஜய், பாலசரவணன், சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிவாங்கி, பாலசரவணன், ஆர்.ஜே.விஜய், பிரியங்கா அருள்மோகன் ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.