‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது.
இதனையடுத்து, இந்த படம் வெளியாகிய 25 வது நாளில், 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ட்விட்டர் பக்கத்தில் வெளியான இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Entering the 25th Day with a bang! Your favourite entertainer #DOCTOR joins the 100 crore club😍
Thank you for the overwhelming support and love. You made this happen ♥️ #DOCTORHits100Crs #MegaBlockBusterDOCTOR @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl pic.twitter.com/pj2wkTkm7G
— KJR Studios (@kjr_studios) November 2, 2021