நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை சாட்டிலைட் டிவி, ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஸன் மையமாக கொண்டு அயலான் படமும், அசத்தல் படமாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படமும் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இயக்குனர் மித்ரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் தான் ஹீரோ. இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இப்படத்தை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்களும், படத்தின் கதையை குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் அட்லீயிடம் பணிப்புரியும் உதவி இயக்குனரான போஸ்கோ இந்த படத்தின் கதை முழுவதும் என்னுடையது என்று கூறினார். உடனே அவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து எழுத்தாளர் சங்கம் இயக்குனர் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
ஆனால் அதை அவர் தவிர்த்து விட்டார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னாடியே படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் இப்படத்தை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு இப்படக்குழு திட்டமிட பட்டிருந்தது. ஆனால் இப்படம் சம்மந்தமான தீர்ப்பு மித்ரனுக்கு எதிராகவே வந்திருந்தது. இதை அடுத்து சாட்டிலைட் டிவி, ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.