தன் பிள்ளைகள் சரியான வாழ்கை துணையை தேர்ந்து எடுத்திருந்தால் அதற்கு பெற்றோர்கள் தயங்க வேண்டாம் சிவகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சிவகுமார் கூறுகையில் , இளைஞர்கள் தங்கள் காதல்களை முடிந்தவரை பெற்றோரிடம் கூறிவிடுங்கள் .பெற்றோர்கள் தன் குழந்தைகள் சரியான துணையை தேர்ந்தெடுக்கும் பட்ச்சத்தில் அவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள். தன் மகன் சூர்யா காதல் திருமணத்திற்கு தான் தடையாக இருந்ததும் இல்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் , பெற்றோர்கள் தன் மகனோ அல்லது மகளோ வருங்கால வாழ்க்கை ஏமாற்றமாக போய்விடுமோ என்ற கருத்தில் தான் நிறைய பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். காதலித்தால் பெற்றோரிடம் தெரிவியுங்கள் அவர்கள் முடிவுக்கு கட்டுப்படுங்கள் என்றும் தன் பிள்ளைகள் சரியான வாழ்கை துணையை தேர்ந்து எடுத்திருந்தால் அதற்கு பெற்றோர்கள் தயங்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.