Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் டூயட் பாடிய சிவாங்கி…. இவரோட படத்துக்கு தான்…. வெளியான புதிய தகவல்….!!

சிம்புவுடன் சேர்ந்து சிவாங்கி டூயட் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக மக்கள் மத்தியில் அறிமுகமானார் சிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜே மற்றும் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். மேலும், கவர் பாடல்கள் மற்றும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.

Cook With Comali Pugazh Sivaangi Next Movie | குக் வித் கோமாளி சிவாங்கி அடுத்து நடிக்கப்போகும் படம் என தெரியுமா ?

இந்நிலையில், இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கும் மாயன் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக வினோத் மோகன் மற்றும் கதாநாயகியாக பிந்துமாதவி நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவாங்கி மற்றும் சிலம்பரசன் ஆகியோர் சேர்ந்து  டூயட் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |