Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற சிவராத்திரி விழா…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

சிவராத்திரி விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடித்த பெண்கள் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் சிவராத்திரி விழா நடை பெற்றுள்ளது. இதில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களின் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நகைகளை திருடிய பெண்கள் பற்றி விசாரணை நடத்தியதில் அவர்கள் மற்றொரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அந்த பெண்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முத்தம்மாள் மற்றும் விஜயா என்பதும் சிவராத்திரி விழாவின் போது பெண் பக்தர்களிடம் நகையை கொள்ளையடித்தும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த 5 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து மீண்டும் சென்னை புழல் சிறையில் அவர்களை அடைத்துள்ளனர்.

Categories

Tech |