இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் 6 பவுலர்கள் ஓப்பனிங் வீரர்களாக களமிறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.. ஐபிஎல்லில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், பல வியூகங்களை வகுத்து வருகிறது..
அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தந்த அணியின் கேப்டன்கள் திடீரென ஒரு முடிவை எடுக்கின்றனர்.. அதற்கு பெயர் போனவர் சென்னை அணியின் எம்எஸ் தோனி தான்..
ஆனால் இவரதுயுக்தியை பலர் இப்போது கையில் எடுக்கத் தொடங்கிவிட்டனர்.. அப்படித்தான் சமீப காலமாக ஓரளவிற்கு பேட்டிங் செய்ய தெரிந்த வீரர்களை ஓபனிங் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.. அப்படி இந்த ஆண்டும் ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்புள்ள பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்..
ரஷீத் கான் :
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட்டு வருகிறார்.. இவருக்கு வயது 21 தான் ஆகிறது.. சிறப்பாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக இருக்கும் இவர் சிக்ஸர் அடிக்கும் திறமையும் வைத்திருக்கிறார்.. இந்த ஆண்டு இவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 165 என்பது குறிப்பிடத்தக்கது.
சாம் கர்ரன் :
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆன சாம் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட இருக்கிறார்.. சுரேஷ் ரெய்னா இல்லாத நேரத்தில் இளம் வீரரான இவர் ஓபனிங் வீரராக களமிறங்கி ஆடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.. கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக இவர் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது..
மிட்செல் மெக்லனகன் :
மும்பை இந்தியன்ஸ் அணியின் மிட்செல் மெக்லானகன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். மும்பை அணிக்காக அவ்வப்போது மதிப்பு மிக்க ரன்களை அடித்து வருகிறார்.. இந்த ஆண்டு இவர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இல்லை என்றாலும் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் அதிரடியாக ஆட களமிறக்கி விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசுரு உதான :
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான முதல் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. டி20 போட்டியில் அதிரடியாக ஆடும் திறமை உள்ள இவர் விராட் கோலி நினைத்தால் ஓப்பனிங் பேட்ஸ் மேனாக களமிறங்க வாய்ப்பு இருக்கிறது..
ரவிச்சந்திரன் அஸ்வின் :
இந்திய அணியின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் அஸ்வின் தனது 20 வயது வரை ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக ஆடிக் கொண்டிருந்தார்.. இவர் டெஸ்ட் போட்டியிலும் சில சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் சில அரை சதங்களையும் அடித்துள்ளார்.. ஆகவே டெல்லி அணி திடீரென்று இவரை தொடக்க வீரராக களம் இறக்கும் வாய்ப்பு இருக்கிறது..
சுனில் நரேன் :
கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருக்கும் சுனில் நரைன் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவர் மட்டும் இல்லாமல், அதிரடியாக ஆடக்கூடிய பவரும் இவருக்கு இருக்கிறது.. இவரை கொல்கத்தா அணி கடந்த சில ஆண்டுகளாகவே ஓபனிங் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறது.. அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதிரடியில் கலக்குகிறார்.. இந்த முறை அவர் ஓப்பனிங்கில் இறக்கிவிடப்படலாம் என்பதில் எந்த சந்தேகமில்லை..