Categories
மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற திரும்பிய 6 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் 6 பேர் கும்பகோணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

100க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல மாநாட்டில் பங்கேற்ற 35 பேருக்கு திருவாரூரில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை 7, ராஜபாளையம் 4, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 46 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |