Categories
உலக செய்திகள்

ஆப்கானில் தற்கொலை படை தாக்குதல்… ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி..!!

ஆப்கானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில்  அங்குள்ள தலைநகர் காபூலில் உள்ள மார்ஷல் ஃபாஹிம் ராணுவப் பயிற்சி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

Image result for Six people, including four soldiers, were killed in a deadly suicide attack by militants in the Afghan capital of Kabul.

இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆறுமாத காலமாக இத்தகைய தாக்குதல் நடக்கவில்லை என்றனர். இந்ததாக்குதலுக்கு மத்திய வெளியுறவுதுறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளது.

Categories

Tech |