Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் துப்பாக்கிசூடு… 6 பேர் பலி… பயங்கரவாதிகள் சதியா?

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2  இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு சம்பவம் சர்வசாதாரணமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் தனக்கென்று துப்பாக்கி வைத்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் சாதாரணமாக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Image result for Six people were killed in a shootout in 2 locations in New Jersey, USA.

இந்தநிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூஜெர்சியில்நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில்  மர்ம நபர் இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சண்டை 4 மணிநேரம் நடைபெற்றது. இந்த சண்டையில் 6 பேர் பலியாகினர்.

Image result for Six people were killed in a shootout in 2 locations in New Jersey, USA.

நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த  இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம். இதில் மர்ம நபர்கள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதல் பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை.

Categories

Tech |