Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 வருஷம் ஆச்சுல்ல….. ”திரும்ப வந்துட்டேனு சொல்லு” அசத்த போகும் ஸ்மித் …!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக் டி20 தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டீவன் ஸ்மித் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபர் ஸ்டீவன் ஸ்மித். இவர் தற்போது ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த மாதம் ஆஸ்திரேலிய டி20 அணியிலும் இடம்பிடித்தார்.இவர் ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு கிட்டத்திட்ட மூன்றரை வருடங்களுக்கு தற்போது இடம்பிடித்துள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்மித் டி20 போட்டிகளிலும் தனது ரன்வேட்டையை தொடர்ந்து வருகிறார்.

இதன் காரணமாக இந்தாண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் டி20 தொடருக்கான, சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து அசத்தியுள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மீண்டும் சிட்னி அணியில் சேரவிருப்பதால் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்துவேன்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |