Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் படங்கள்….. பட்டியல் இதோ….!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நியூ, வியாபாரி, இசை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மெர்சல் படத்திலிலும், ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன.

விஜய் - அஜித் அரசியல் வருகை பற்றி எஸ்.ஜே.சூர்யா || SJ Suryah about Vijay  Ajith political

அந்த வரிசையில், ராதாமோகன் இயக்கத்தில் ‘பொம்மை’ படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வெங்கட்ராகவன் இயக்கத்தில் ‘கடமை பேய்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஒரு வெப் தொடரிலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |