”பிரின்ஸ்” பட ட்ரைலர் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும், தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான எஸ். ஜே. சூர்யா இந்த படத்தின் டிரைலர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”பிரின்ஸ் பட ட்ரெய்லர் மிகவும் கலகலப்பாக இருந்தது. தாமதமாக ட்வீட் செய்வதற்கு மன்னிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.
Sirrrr thank you so much ❤️❤️ Neenga eppo wish pannalum magizhchi dhan sir 🤗🤗 https://t.co/WWEsu7zFm2
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 12, 2022