சிவகார்த்திகேயன் 20-ஆவது படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் எழுதி இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் 20 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமன் இசையில் பாடல்கள் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி, ராசிகன்னா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் காரைக்குடியில் தொடங்கிய நிலையில் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.