Categories
உலக செய்திகள்

அவரே என்கூட இருக்குற மாதிரி உணர்வு… எலும்பு கூட்டில் தயாரித்த கிட்டார்… இசைக்கலைஞரின் புது முயற்சி…!!

இசைக்கலைஞர் ஒருவர் மறைந்த தனது குருநாதரின் எலும்பு கூட்டிலேயே எலக்ட்ரிக் கிட்டார் ஒன்றை தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ப்ளோரிடாவில் பிரபல இசைக் கலைஞருமான பிரின்ஸ் மிட்நைட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆசானின் எலும்புக் கூட்டில் எலக்ட்ரிக் கிடார் தயாரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனக்கு கிட்டார் இசை கருவியை திறமையாக வாசிக்க தனது குருநாதர் கற்றுக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு குருநாதராகவும், உறவினராக இருந்த அவரின் நினைவாக அவரது எலும்புக் கூட்டை வைத்து ஒரு எலக்ட்ரிக் கிட்டார் தயாரித்ததாக பிரின்ஸ் கூறியிருக்கிறார். இந்த கருவியை வாசிக்கும் போதெல்லாம் தனது குருநாதர் தன்னுடனே இருப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றும், இது ஒருவிதமான இசை அஞ்சலி எனவும் பிரின்ஸ் மிட்நைட் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |