Categories
அரசியல் மாநில செய்திகள்

1 வருஷத்துக்கு முன்பே ஸ்கெட்ச் …. மந்திரி ஆக்க பக்கா பிளான்…. போட்டுடைத்த உதயநிதி…!!

திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு.  ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக…  உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள்.

இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், எல்லா பத்திரிக்கை நண்பர்களும் இந்த அமைச்சர் பொறுப்பை பற்றி தான் தினமும் விவாத நிகழ்ச்சிகள். உதயநிதிக்கு எப்படி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது என்று ? அதற்கு மிக முக்கியமான காரணம் இங்கே உட்கார்ந்து இருக்கக்கூடிய அண்ணன் ஆவடி நாசர் அவர்கள்தான். ஒன்றரை வருடமாக மாதத்திற்கு ஒருமுறை எதாவது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து விடுவார்.

எதை, எப்போது செய்ய வேண்டும் ? என்று நம்முடைய தலைவருக்கு தெரியும். அந்த பொறுப்பை என்னிடத்தில் ஒப்படைத்து இருக்கிறார். இங்கே மூத்த அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறீர்கள், மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கீங்க. இங்கு இருக்குற எல்லோருமே எனக்கு மூத்தவர்கள் தான், நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வது என்னுடைய செயல்பாடுகள் மூலம்… கண்டிப்பாக எனக்கு கொடுத்து இருக்கக்கூடிய பொறுப்பிற்கு உண்மையாக இருப்பேன் என்று இங்கே…  ஆவடி பொதுக் கூட்டத்தில் உறுதியாக கூறுகிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |