”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பை சார்ந்த 250 க்கும் மேற்பட்டோர் நேற்று மட்டும் எட்டு மாநிலங்களிலே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மத்திய பிரதேஷ், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலே நேற்று சோதனைகள் நடைபெற்றன. விடிய விடிய காலை முதல் மாலை வரை இந்த சோதனைகள் தொடர்ந்தன. அதற்கு முன்னதாகவே நாடு முழுவதும் சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலே பல்வேறு இடங்களிலே சோதனை நடைபெற்றது. அப்பொழுது பல ஆவணங்கள் கைப்பற்ற பட்டன. அந்த சோதனைகளிலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு முகவை மற்றும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டனர். இதைத்தவிர ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” இந்த சோதனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டங்களிலே ஈடுபட்டவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி பல வகைகளான கைதுகள் நடைபெற்றுள்ளன. இதைத்தவிர பீஹார் மாநில தலைநகரான பாட்னாவிலேயே பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டம் நடந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டமிட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போதே ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” மற்றும் ”எஸ்டிபிஐ” போன்ற அமைப்புகள் பல்வேறு விதமான சதி திட்டங்களில் ஈடுபடுகின்றன என சோதனைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. அப்போது தொடங்கிய இந்த சோதனைகளின் அடிப்படையிலே தான் சென்ற வாரமும், நேற்றும் நாடு முழுவதும் சோதனை நடைபெற்று தற்பொழுது ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” – வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.