நன்னிலம் அருகில் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பனங்குடி பகுதியில் மதுக்கடை ஒன்று இருகின்றது. அந்த மது கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் ஆண்டிபந்தல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராராந்தி மங்கலத்தில் வசித்து வரும் பால்ராஜ் மற்றும் அந்தோணிராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கடந்த மாதம் பனங்குடியில் இருக்கும் மதுக்கடையில் மதுபாட்டில்களை திருடி சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை திருடிய குற்றத்திற்காக பால்ராஜ் மற்றும் அந்தோணிராஜ் இருவரையும் கைது செய்துள்ளனர்.