சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது ஆப்பிள் சீடர் வினிகர். கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் சீடர் வினிகரை மாத பட்ஜெட்டில் சேர்த்துக் கொண்டு கணிசமான முறையில் பயன்படுத்தினால். ஒரே பொருளைக் கொண்டு நிறையப் பலன்களை அடையலாம்.
உடல் குறைப்பிற்காக பெரும்பாலும் பயன்படுத்தபடும் ஆப்பிள் சீடர் வினிகர், காலம் காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறது.
பொதுவாக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம் அல்லது உணவுக்கு முன் அருந்தலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலமானது உடல் குறைப்பிற்கு உதவுகிறது. தொப்பை கொழுப்பு , அதீத உடல் பகுதிகளில் உள்ள கொழுப்பு குறைப்பதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது.
இந்த பானத்தை அருந்துவது, கொழுப்பு அளவை குறைப்பதற்கும் ஏதுவாக உள்ளது.
பாக்டீரியாக்களை அளித்து வாயில் துர்நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
செரிமான கோளாறுகளுக்கும் ஏற்ற மருந்தாக உள்ளது.
தலையில் ஷாம்பு பயன்படுத்திய பின்னர் வினிகரைக்(வினிகர் மற்றும் தண்ணீர் கலவை) கொண்டு அலசுவது முடி போஷாக்காகவும்
நல்ல பளபளவென இருப்பதற்கும் உதவுகிறது.
பருக்கள், தழும்புகள், வெங்குரு மற்றும் சருமத்தில் உள்ள பி.ஹெச் அளவை பராமரிக்க உதவுகிறது. ஆனால், வினிகரை தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டும். சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தினால் அதுல உள்ள அசிட்டிக் அமிலத்தன்மையானது சருமத்திற்குப் பாதிப்பு விளைவிக்கும். அது போல், அருந்தும் போதும் கண்டிப்பாக நீருடன் கலந்தே அருந்த வேண்டும்.