இந்தியாவின் ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கோடியக் கார்ப்பரேட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் புதியதாக கோடியாக் கார்ப்பரேட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் விலை ரூ. 32.99 லட்சம் என நிர்ணயம் நிர்ணயித்துள்ளது. இந்த காரானது அந்நிறுவனத்தின் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 2 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாகா இந்த புதிய கார்ப்பரேட் எடிஷன் மாடல் காரானது இந்திய சந்தையில் ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஏற்கனவே ஸ்கோடா நிறுவன வாகனங்களை வைத்திருப்போர் மட்டுமே இந்த புதிய கோடியாக் கார்ப்பரேட் காரை வாங்க முடியும். இந்த ஸ்கோடா கோடியாக் எஸ்.யு.வி.: ஸ்டைல் மற்றும் எல்.கே. என இருவித வேரியன்ட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பேஸ் ஸ்டைல் மாடலின் விலை ரூ. 35.36 லட்சம் என்றும் எல்.கே. வேரியண்ட் விலை ரூ.36.78 லட்சம் என்றும் அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இந்த புதிய வேரியண்ட்டில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஃபாக் லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய கார்ப்பரேட் எடிஷனில் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 340 என்.எம். டார்க் செயல்திறனை கொடுக்கிறது. இதனுடன் 7-ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்ம் கொடுக்கப்பட்டுள்ளது.