Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்து விற்பனை…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் காவல் அதிகாரி பால்ராஜ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செங்காதலை ரோட்டில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஸ்கூட்டர் மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் கடத்தி வந்த குற்றத்திற்காக வீர விநாயகம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Categories

Tech |