Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI முதல் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை ….! 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  187 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

இலங்கை  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் திமுத் கருணரத்னே 147 ரன்கள் குவித்தார் . வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ்  5 விக்கெட் கைப்பற்றினார் .இதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 230 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பிறகு 156 ரன்கள் முன்னிலையில் இலங்கை  அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்த நிலையில்  டிக்ளர் செய்வதாக அறிவித்தது .இதன்பிறகு 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .ஆனால் 18 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து திணறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பொனர் – ஜோஷுவா டா சில்வா இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பொனர் 68 ரன்னில் வெளியேற , அடுத்து சில்வா 54 ரன்னில் ஆட்டமிழந்தார் .இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 160 ரன்னில் சுருண்டது. இதனால் 187 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |