வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 328 ரன்கள் எடுத்துள்ளது .
இலங்கை -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது .தொடக்க வீரராக களமிறங்கிய நிசாங்கா 73 ரன்கள் குவித்தார் .வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும், ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர் .இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெயிட் 74 ரன்கள் குவித்தார்.
இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டும், எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன் பிறகு இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .இதில் ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழக்க ஒருபுறம் பொறுப்புடன் விளையாடிய தனஞ்செயா டி சில்வா சதம் அடித்து அசத்தினார் .இதனால் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்துள்ளது. இதில் தனஞ்செய டி சில்வா 153 ரன்னும் , லலித் எம்புல்டெனியா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் .இதன் மூலம் இலங்கை அணி 279 ரன்கள் முன்னிலையில் உள்ளது.