Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS ZIM ஒருநாள் தொடர் : இலங்கை அணியில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு ….!!!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது .இதையடுத்து 2-வது போட்டி 18-ஆம் தேதியும் மூன்றாவது போட்டி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் வநிந்து ஹசரங்கா, குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாகவும், அவிஷ்கா பெர்னாண்டோ, கமில் மிஷ்ரா மற்றும் ஜெனித் லியங்கே ஆகியோர் கொரோனா தொற்று காரணமாகவும் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இத்தொடரில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி: தசுன் ஷானகா (கேப்டன் ), பதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக, சரித் அசலங்க, மஹீஷ் தீக்ஷனா, சாமிக்க கருணாரத்ன, ஜெஃப்ரி வான்டர்சே, நுவான் துஷார, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, துஷ்மந்த சமீர, சமிக குணசேகர, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், ஷிரான் ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ்.

காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டார, புலின தரங்கா, நிமேஷ் விமுக்தி, ஆஷியன் டேனியல், அசித்த ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |