Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பேச்சு….. பாஜக நிர்மல் குமாருக்கு தடை நீட்டிப்பு….. கோர்ட அதிரடி….!!!!!

தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவரை பற்றி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். அதாவது மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் தன் மீது அவதூறு பரப்பும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது அவதூறு நோட்டீஸ் அனுப்பியும் தொடர்ந்து நிர்மல் குமார் அவதூறாக பேசி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு நிர்மல் குமார் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ந ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அவதூறு பேச்சுக்கு டுவிட்டர் மற்றும் youtube பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு‌ வழக்கு விசாரணையை டிசம்பர் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும் அதுவரை நிர்மல் குமாருக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீதிபதி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |