Categories
மதுரை மாநில செய்திகள்

“பெரியார் குறித்து அவதூறு” ரஜினியின் உருவபொம்மை எரிப்பு…. 10 பேர் கைது…!!

தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர்.

 கடந்த வாரம் துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர். பொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்த காவல்துறை அதிகாரிகள் அதனை எரித்து போராட்டம் நடத்திய ஆதிப்பேரவை உறுப்பினர்கள் 10 பேரை கைது செய்தனர்.

Categories

Tech |