வெயில் காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக நமக்கு தூக்கம் என் மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க. நல்ல தூக்கம் கிடைக்கும்.
இப்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கமாகத்தான் இருக்கும். கோடை வெயில் இப்போதிலிருந்தே வெயில் சுட்டெறிக்க ஆரம்பித்து விட்டது. எனவே நாம் இரவு தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்நிலையில் சூட்டுடன் காற்றடியின் சூடும் சேர்ந்தால் தூங்குவது மிகவும் சிரமமாகி விடுகிறது. இதற்கு இந்த எளிய வழியை பின்பற்றலாமே.
டேபிள் ஃபேன் முன்பாக ஐஸ் நிரம்பிய கிண்ணத்தை வைத்து விட்டால் காற்றடியில் இருந்து வெளிப்படும் காற்றில் ஐஸின் குளிர்ச்சியை ரூம் முழுவதுமாக பரவிவிடும். ஐஸ் உருகினாலும் அதனை தொடர்ந்து அந்த குளிர்ச்சியை அளிக்கும் இதனால் நிம்மதியாக உறங்கலாம். தூக்கமும் கெடாது.