Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே தூங்குனது குத்தமா… 70 வயது மூதாட்டியையும் விட்டுவைக்காத கும்பல்… அதிரவைக்கும் சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த ஒரு கும்பல் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் மூக்கு, வாய் போன்ற பகுதிகளை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இதுகுறித்து அவரது குடும்பத்தினர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை.

காவல்துறையினர் சம்பவம் குறித்து அறிந்து தாமாகவே முன்வந்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் அந்த குற்றத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் 70 வயது மூதாட்டியின் நகைக்கு ஆசைப்பட்டு இந்த சம்பவத்தை செய்தது தெரியவந்தது. மேலும் மருத்துவமனையில் உள்ள மூதாட்டியிடம் இதுகுறித்து விசாரணை செய்த போது இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களை அடையாளம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |