நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து விஜய் ,தனுஷ் ,சூர்யா ,விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது இவர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சர்க்காரு வாரி பட்டா , ரங் டே ஆகிய தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
🌻
📸- @tarunkoliyot @shravyavarma #HomeShoot #ShootDiaries #GoingCasualWithKeerthy pic.twitter.com/jY6YAuc27g
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 28, 2021
மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் கீர்த்தி ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.