Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா சற்று அதிகரிப்பு… அச்சத்தில் பொதுமக்கள்… மொத்த பாதிப்பு 46,277 ஆக உயர்வு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 74 பேர் பாதிப்படைந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பின் படி நேற்று ஒரே நாளில் புதிதாக 74 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,277 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி இதுவரை 45,016 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று 66 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இதுவரை 827 பேர் தொடர்ந்து கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாமக்கல்லில் நேற்று முன்தினம் கொரோனாவிற்கு 66 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |