தொழிலாளி கட்டிலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் இருக்கும் அம்மாபட்டி கிராமத்தை சார்ந்தவர் பாண்டியராஜன். இவர் சென்ட்ரிங் தொழிலாளி ஆவார். மது பழக்கத்திற்கு அடிமையானவர் இவர் 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு கட்டிலில் படுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே அவருடைய உறவினர்கள் இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.