திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும் கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் , கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்து அமைப்பினை சார்த்தவர்கள் மேடையை நோக்கி கற்கள் , செருப்பு மற்றும் இருக்கைகளை தூக்கி எறிந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தி.க_வினர் பதிலுக்கு தாக்குதல் நடத்த தொடங்கினர்.இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. அங்கிருந்த போலீஸ் கல் இருந்தவர்களை விரட்டியடித்தனர். இந்த கல்லெறி சம்பவ வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.