டி2உலகக்கோப்பை குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்குச் செல்ல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே போட்டி நடைபெறும் நிலையில், இன்று முடிவு தெரியும்..
ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் குரூப் 1 பிரிவில் 6 அணிகள் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. தற்போது இந்த சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் 4 போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. இதில் ஏற்கனவே குரூப்-1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து அணி மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த குரூப் ஏ பிரிவில் அரை இறுதிக்கு செல்வதில் 2 அணிகளுக்குள் போட்டி நடக்கிறது.
அதாவது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தான் அந்தப் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா அனைத்து போட்டிகளிலும் விளையாடி 7 புள்ளிகள் பெற்று சூப்பர் 12 சுற்றை நிறைவு செய்துள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணி குரூப் 1 பிரிவில் 2 ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி 5 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி சிட்னியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி 7 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி போல சமநிலையில் இருக்கும். ஆனால் தற்போது இங்கிலாந்து அணியின் ரன் ரேட் (+0.547) அதிகமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் (-0.173) குறைவாக உள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்தினால் அரை இறுதிக்கு தகுதி பெறுவது உறுதி. அதே நேரத்தில் ஒரு வேளை இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும்.. எதிர்பாராத விதமாக இந்த போட்டி மழையால் கைவிடப்படும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கும்போது, ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழையும். மேலும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தினால் அந்த அணி புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணியையும் தாண்டி முதல் இடத்துக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 புள்ளிபட்டியல் :