போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது.
தபால் நிலைய சேமிப்பு:
தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் .வைத்திருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது இதன்மூலம் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கும் 6.8 சதவீதத்தை தொடர்ந்து அளிக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்களின் முதலீட்டுக்கு உத்தரவாதமான லாபமும் கிடைக்கின்றது.
சிறுசேமிப்பு சான்றிதழ்
இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் திட்டங்களில் மிக சிறந்த திட்டம் தேசிய சிறுசேமிப்பு திட்டம். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப் பட்டு வருகின்றது. முதலீட்டாளர்கள் பணம் வங்கிகளை விட பாதுகாப்பாக இருக்கும். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதலீட்டாளர்கள் சில நிபந்தனைகளுடன் ஒரு வருடத்திற்கு பிறகு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும், இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது.
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்:
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் வெறும் நூறு ரூபாயில் முதலீட்டில் தொடங்கலாம். ஐந்து ஆண்டுகளில் உங்களால் லட்சாதிபதி ஆகி விட முடியும். முதலீடு செய்யும் தொகையை உயர்த்தினால் நீங்கள் எந்தவித முதலீடு ஆபத்தும் இல்லாமல் கோடீஸ்வரர் ஆகலாம். ஒரு லட்சம் வரை முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1,38,949 வருமானம் கிடைக்கும். 26ம் ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக 12,500 முதலீடு செய்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். உடனே தபால் நிலையத்திற்கு சென்று இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.