Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அம்மா வந்தா திட்டுவார்” விளையாட்டு விபரீதமானது… சடலமாக கிடந்த சிறுவன்…!!

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, சேலை கழுத்தை இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்க நேந்தல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் வழக்கமாக சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது போல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விளையாடி இருக்கிறான். மேலும் சிறுவன் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடினால் அம்மா திட்டுவார் என்ற பயத்தில் கதவை பூட்டிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது திடீரென விளையாடிக்கொண்டிருக்கும் போது, சேலை சிறுவனின் கழுத்தை இறுக்கி விட்டது. அதனை சிறுவன் எடுக்க முயற்சி செய்தும் அவனால் அது முடியாததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து சந்தைக்குச் என்ற சிறுவனின் தாயார் மகேஸ்வரி திரும்பி வந்து பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிறிது நேரம் வாசலிலேயே அமர்ந்துள்ளார். அதன்பின் தனது தந்தை குமரவேலுவை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு மகேஸ்வரி அழைத்துள்ளார்.

அவர் வந்து வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று பார்த்தபோது ஊஞ்சலில் கழுத்தை இறுக்கிய நிலையில் சிறுவன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அபிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அபிராமம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |