பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ சுந்தரி என்ற மகளும், சபரிகிரி என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்லதுரை இறந்து விட்டதால் மகாலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிவசுந்தரியின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகு அவரை வகுப்பறைக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து திடீரென வாந்தி எடுத்து சிவசங்கரி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சிறுமி இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.