Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடந்த உழவு பணி…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

டிராக்டரின் சுழல் கலப்பையில் சிக்கியதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு என்ற தர்மசிவம் என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரனின் வயலில் மஞ்சன் என்பவர் உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை அடுத்து சிறுவனான தர்ம சிவம் டிராக்டரின் பின் பக்கத்தில் இருக்கும் கலப்பையின் மீது ஏறியுள்ளார்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பரமசிவம் டிராக்டருக்கும், கலப்பைக்கும் இடையில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மஞ்சன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |