தண்ணீரில் மூழ்கி 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் முத்துகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.