கிணற்றில் 6 – ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவனை பிணமாக மீட்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலாவூரணி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 6 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 22 – ஆம் தேதியன்று மாரியப்பன் மற்றும் அவரின் மனைவி இருவரும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு வேலைக்கு சென்று மாலை நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முருகனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முருகனை தேடி பார்த்து வந்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் மாரியப்பன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து ஆலாவூரணி பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் பிணம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் பிணத்தை மீட்டெடுத்துள்ளனர். இந்நிலையில் பிணமாக மீட்டெடுத்தது மாரியப்பனின் மகனான முருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முருகனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.