மது வாங்கி தர மறுத்ததால் வாலிபரை சிறுவன் சோடா பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்ற போது 17 வயது சிறுவன் மது வாங்கி தருமாறு ரஞ்சித்துடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ரஞ்சித் மது வாங்கி தர முடியாது என அந்த சிறுவனிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் அருகில் கிடந்த சோடா பாட்டிலை எடுத்து ரஞ்சித்தை குத்தியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இந்த சிறுவன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.