Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாங்க தான் தள்ளி விட்டோம்”…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

4 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் பார்த்திபன் தனது 2 – வது மகனான தீனதயாளனை அதே பகுதியில் உள்ள தனது தாயாரான லட்சுமி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த  தீனதயாளனை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி பார்த்திபனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு பார்த்திபன் தீனதயாளனை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு தீனதயாளனுடன் அதே பகுதியில் வசிக்கும் 11 மற்றும் 13 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து 11 மற்றும் 13 வயது சிறுவர்கள் தான் தீனதயாளனை கிணற்றில் தள்ளி விட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீனதயாளனின் சடலத்தை மீட்டனர்.

அதன்பிறகு காவல்துறையினர் தீனதயாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேலும் அந்த 2 சிறுவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |