நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது விளையாட்டாக சிறுவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திப்பட்டி பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் வயலுக்கு சென்ற பிறகு அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களுடன் சதீஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை விளையாட்டாக குடிக்க போகிறேன் என்று கூறிய சதீஷ் திடீரென அதனை குடித்துவிட்டான்.
இதனை அப்பகுதியில் உள்ள பெரியவர்களிடம் ஓடிச்சென்று சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சதீசை மீட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.