பாறை உருண்டு விழுந்து ஆடு மேய்க்க சென்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மெட்டுகாடு என்ற பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளார். இதனையடுத்து பாறைக்கு அடியில் அமர்ந்திருந்த மணிகண்டன் மீது அந்த பாறை உருண்டு விழுந்து விட்டது.
இதனால் படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.